நடிகர் விஷாலுக்கு காங்கிரஸ் எம்பி ஆதரவு… விரைவில் நாடகம் தொடங்கும் ; பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரிப்பு என விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan29 September 2023, 12:42 pm
மார்க் ஆண்டனி ஹிந்தி ரீமேக் திரைப்படத்திற்காக ஆறு லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டதாக நடிகர் விஷால் புகார் கூறிய நிலையில், அவருக்கு ஆதரவாக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குரல் கொடுத்துள்ளார்.
நடிகர் விஷாலிடம் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு இந்தி ரீமைக் கொடுமைக்காக மும்பை சிபிஎஸ்சி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக நேற்று விஷால் தனது எக்ஸ் தல பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். நடிகர் விஷாலுக்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்க தாகூர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- 9 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜகவின் அறிவியல் ஊழல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இது இப்போது நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது, சி.பி.எப்.சியில் உள்ளவர்களை கைது செய்ய அல்லது பணிநீக்கம் செய்ய விரைவில் நாடகங்கள் தொடங்கும். மோடி ஏதோ சொல்கிறார், இன்னொன்றை செய்கிறார்.
9 ஆண்டுகளாக லோக்பால் செயல்படுவதற்கான கட்டமைப்பு இல்லை. நாடகபாசி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது, எனக் குறிப்பிட்டுள்ளார்.