பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட காங்., எம்பி : பாஜக கடும் எதிர்ப்பு… முதலமைச்சர் விளக்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 8:28 pm

பாகிஸ்தான் ஜிந்தாபாத் என கோஷமிட்ட காங்., எம்பி : பாஜக கடும் எதிர்ப்பு… முதலமைச்சர் விளக்கம்!

கர்நாடகத்தில் மாநிலங்களவை தோ்தலில் காங்கிரஸ் வேட்பளார் நசீர் உசேன் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை பெங்களூரு விதான சவுதாவில் ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

அதில் ஒருவர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிட்டார். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து தீவிரமாக போராட்டத்தை நடத்தியது.

மத்தியமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய நபரை கைது செய்யாவிட்டால் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்துவோம். என்றார்.

இந்தநிலையில் முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- பெங்களூரு விதான சவுதாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

இதை பா.ஜ.க மட்டுமின்றி ஊடகங்களும் கூறுகின்றன. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியது தொடர்பான குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் தப்ப விடமாட்டோம் என கூறியுள்ளார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!