கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி தற்போது ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பாதயாத்திரை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நடைபெற்று தற்போது ஆந்திராவில் தொடர்கிறது.
நேற்று இரவு வரை கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி இன்று ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடகாவில் இருந்து ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹல்காவால் கிராமம் வழியாக ஆந்திராவை பாரத் ஜடோ யாத்திரை இன்று ஆந்திராவை அடைந்தது.
தொடர்ந்து அருகில் உள்ள சத்திரக்குடி ஆஞ்சநேயர் கோவிலில் நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார்.
ஆந்திராவில் இம்மாதம் 21ம் தேதி வரை 119 கிலோ மீட்டர் நடைபெற இருக்கும் பாரத் ஜடோ பாதயாத்திரை மீண்டும் கர்நாடகாவை அடைந்து அங்கிருந்து பின்னர் தெலுங்கானாவை அடைய உள்ளது.
இந்த நிலையில் பாதயாத்திரையாக ஆந்திராவிற்கு வந்த ராகுல் காந்தியை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக வரவேற்று அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.