ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை பட்டியலினத் தலைவராக சித்தரிக்கும் காங்கிரஸ் : மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!!
Author: Udayachandran RadhaKrishnan16 April 2022, 1:51 pm
வாக்கை பெற அம்பேத்கரை பட்டியலினத்தலைவராக காங்கிரஸ் சித்தரித்தாக மத்திய அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் அம்பேத்கர் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். அம்பேத்கரின் சிலைக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிலையில் மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள் இதுபற்றி கூறுகையில், “காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலினத் தலைவராக சித்தரித்து, அவரின் பெயரைப் பயன்படுத்தியது” என்று கடுமையாக எதிர்த்து உள்ளார்.
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், “ஓட்டு அரசியலுக்காக, அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை.
அம்பேத்கரை பட்டியலின தலைவராக சித்தரித்த வெறும் ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸ் இத்தகைய வேலைகளை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.