காங்கிரஸ் தலைவர் பதவி… கோதாவில் குதித்த சசி தரூர் : வரும் 30 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 September 2022, 5:27 pm

செப்.30ல் சசிதரூர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதுடெல்லி, காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல் பட்டு கொண்டிருக்கிறார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தலைவர் பதவிக்கான தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது. மேலும் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்பு மனுக்களை வருகின்ற 30ஆம் தேதி வரை தாக்கல் செய்து கொள்ளலாம். தலைவர் பதவிக்கான தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறும்.

மேலும் தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி என்னபட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. அதே சமயம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியிட போவதில்லை என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஆனால் ராஜஸ்தான் முதல் மந்திரியான அசோக் கெலாட், கேரளா எம்பி சசிதரூர் போன்றோர் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பது உறுதியாகி இருக்கிறது.
இந்தநிலையில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட செப்டம்பர் 30-ம் தேதி சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலட் ஏற்கனவே வேட்புமனு பெற்றுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • Meenakshi Chaudhry மீனாட்சி செளத்ரிக்கு அரசாங்கம் அடித்த ஆர்டர்? உண்மை நிலவரம் என்ன?