மக்களை அச்சுறுத்தும் எரிபொருள் விலையேற்றம்: டெல்லியில் ராகுல் தலைமையில் காங்., எம்.பி.க்கள் தர்ணா…சிலிண்டர்களுக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!!

Author: Rajesh
31 March 2022, 11:02 am

புதுடெல்லி: எரிபொருள் விலையேற்றத்திற்கு கண்டனம் தெரிவித்து டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Image

எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்ட பிரச்சாரத்தை தொடங்க உள்ளது. மார்ச் 31 முதல் ஏப்ரல் 7 வரை நாடு முழுவதும் பேரணிகள் மற்றும் போராட்டம் ஏற்பாடு செய்யப்படும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி, டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று காலை அக்கட்சியின் எம்.பி.க்கள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

Image

இதுகுறித்து, காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், இந்திய மக்கள் மோடி அரசால் வஞ்சிக்கப்பட்டு, ஏமாற்றப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையேற்றம் குறித்த விஷயத்தில் காது கேளாதது போல செயல்படும் பிஜேபி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களுக்கு வெளியே கேஸ் சிலிண்டர்களுக்கு மாலைகள் அணிவித்தும், மேளம் மணிகள் போன்ற பிற இசைக்கருவிகளை அடித்தும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

Image

ஏப்ரல் 7ம் தேதி, மாநிலத் தலைமையகத்தில் மாநில அளவிலான தர்ணா போராட்டம் நடைபெறும் என்றார். மேலும், சிம்லாவில் நடைபெறும் போராட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image
  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1588

    0

    0