மேற்கு வங்கத்தில் நுழைந்த ராகுல்… கார் மீது கல்வீசி தாக்குதல்… பாரத் ஜோடோ யாத்திரையின் போது பரபரப்பு ; உச்சகட்ட கடுப்பில் காங்கிரஸ்!!

Author: Babu Lakshmanan
31 January 2024, 2:59 pm

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ யாத்திரையை மீண்டும் தொடங்கியுள்ளார். பீகாரில் இந்த நடந்து வந்த யாத்திரையானது, அடுத்து மேற்குவங்கத்தில் நடைபெற்று வருகிறது.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள கடிஹார் பகுதியில் ராகுல் காந்தியின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், கார் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.
மேலும், இந்த தாக்குதலில் ராகுல் காந்தி உள்பட யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி இது குறித்து கூறுகையில்,”மால்டா மாவட்டத்தில் உள்ள ஹரிஷ்சந்திரபூர் பகுதியில், அடையாளம் தெரியாத நபர்கள், ராகுல் காந்தியின் கான்வாய் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் காரின் பின்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. இது ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, இந்த சம்பவம் குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘எங்கள் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு உள்ளது, ஆனால் எங்கள் இந்திய நீதி யாத்திரையை யாரும் தடுக்க முடியாது. இந்த பேரத்தில், “எந்த அச்சுறுதலுக்கும் இந்தியா கூட்டணி தலைவணங்காது. இந்தியா கூட்டணியின் கூட்டமைப்பை வலுப்படுத்துவதும் தனது நோக்கம்” என்று மேற்கு வங்காள முதல்வர் கூறியதை நினைவூட்டுகிறேன்” என்று கூறினார்.

இதனிடையே, ராகுல் காந்தியின் கார் மீது காங்கிரஸ் தொண்டர்கள் ஏறி அமர்ந்ததன் காரணமாகவே கார் கண்ணாடி உடைந்ததாக மற்றொரு தகவல் வெளியாகி வருகிறது.

  • Mammootty replaced in Baasha Movieரஜினியுடன் மம்முட்டி நடிக்க வேண்டிய இன்னொரு படம்.. பறிபோன வாய்ப்பு!
  • Views: - 306

    0

    0