காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்பட 120 பேரின் ஆபாச படங்களை காங்கிரஸ் தலைவர் சிவகுமாரிடம் இருப்பதாக பாஜக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
கடந்த 21ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி கர்நாடகாவின் நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிகோளி இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பெங்களூரு கப்பன்பார்க் போலீஸ் நிலையத்தில் ரமேஷ் ஜார்கிகோளி மீது பலாத்காரம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வழக்கு பின்பு, சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது.
முதலில் அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை எனக் கூறி வந்த ரமேஷ் ஜார்கிகோளி, பின்னர், இளம்பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததை ஒப்புக் கொண்டார். மேலும், அந்தப் பெண்ணுக்கு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என்றும், இளம்பெண்ணின் சம்மதத்துடன் தான் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இது ஆபாச வீடியோ விவகார வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், ஹனிடிராப் முறையில் ரமேஷ் ஜார்கிகோளியிடம் பணம் பறிக்கும் நோக்கத்தில், அவரை சிக்க வைத்திருப்பது விசாரணையில் உறுதியானது.
இளம்பெண்ணின் நண்பர்கள் ரமேஷ் ஜார்கிகோளியிடம் வீடியோவை வெளியிடுவோம் என மிரட்டி பல கோடி ரூபாய் பணம் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீடியோ எடுத்தது யார்?, என்ன காரணத்திற்காக பையில் கேமராவை வைத்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்றார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இளம்பெண் பதில் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிகோளி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ. பெயரை குறிப்பிட்டு (எம்.எல்.ஏ. லட்சுமி ஹெப்பால்கர்), இவரால் தான் டி.கே. சிவகுமாருடனான தனது தொடர்பு பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் உள்பட 120 பேரின் இதுபோன்ற ஆபாச சி.டி.க்களை சிவகுமார் தயாரித்து வைத்திருக்கிறார் என்றும் ஜார்கிகோளி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இதனால், சொந்த கட்சியிலேயே உள்ள பலரை தனது கட்டுக்குள் வைத்திருக்க ஆபாச பட சி,டி.க்களை தயாரித்து வைத்திருக்கிறார் என ரமேஷ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
இந்த சம்பவம் நடந்த போதே, காங்கிரஸ் தலைவர் சிவகுமார், ரூ.40 லட்சம் செலவு செய்து, தன்னை ஹனிடிராப் மூலம் இதில் சிக்க வைத்துள்ளார் என்றும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக ரமேஷ் ஜார்கிகோளி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.