காங்., கூட்டணி படுதோல்வியை சந்திக்கும்.. மீண்டும் பிரதமராக மோடிதான் ஆட்சி செய்வார் : அமித்ஷா உறுதி!

Author: Udayachandran RadhaKrishnan
23 June 2023, 7:37 pm

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் பேரணிக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தால் நடந்த 42,000 உயிரிழப்புகளுக்கு யார் பொறுப்பேற்பார்கள். எங்களது அரசு முழுக்க ஊழலை ஒழிக்க அடித்தளம் இட்டு இருக்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 12 லட்சம் கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை மோடி தான் ஆட்சியில் இருந்து நீக்கினார். ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க பிரதமர் மோடி வலுவான அடித்தளம் இட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீரை கடந்த முப்பது ஆண்டுகளாக மூன்று குடும்பங்கள் ஆட்சி செய்துள்ளன. 370 அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கு எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

தீவிரவாதத்திற்கு 42,000 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். ஆனாலும், சட்டப்பிரிவு 370 அமலில் இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, பிடிஎப் தலைவர் மெஹ்பூபா முப்தியை பார்த்துக் கேட்கிறேன், 42,000 பேர் உயிரிழந்து இருப்பதற்கு யார் பொறுப்பேற்பார்கள்.

அவர்கள்தானே அப்போது ஆட்சியில் இருந்தார்கள். மோடி ஆட்சியின் கீழ் தீவிரவாதம் முற்றிலும் வேரறுக்கப்பட்டுள்ளது. 300 இடங்களைப் பிடித்து மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவார் என்றார்.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 557

    0

    0