கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும்.. 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ துணை முதலமைச்சர் திட்டம்? குமாரசாமி பகீர் பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 December 2023, 5:29 pm

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும்.. 60 எம்எல்ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ துணை முதலமைச்சர் திட்டம்? குமாரசாமி பகீர் பேச்சு!!

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த குமாரசாமி, காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வருகிறார். மதச்சார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது போல தற்போதும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழப் போகிறது என கூறி வருகிறார் குமாரசாமி.

இந்த நிலையில் ஹாசனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த குமாரசாமி, கர்நாடகா அமைச்சரவையில் உள்ள சீனியர் ஒருவர் விரைவில் 50 முதல் 60 எம்.எல்.ஏக்களுடன் பாஜகவுக்கு தாவ இருக்கிறார். கர்நாடகா அரசு விரைவில் கவிழப் போகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். காங்கிரஸ் ஆட்சியில் எதுவுமே நன்றாக இல்லை. சித்தராமையா தலைமையிலான அரசு எப்போது கவிழும் என்பது எனக்கு தெரியவில்லை. அந்த சீனியர் அமைச்சர் தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பித்தால் போதும் என நினைக்கிறார். மத்திய அரசு அந்த அமைச்சர் மீது போட்ட வழக்குகளில் இருந்து அவரால் தப்பிக்கவே முடியாது.

மகாராஷ்டிராவில் (சிவசேனா கட்சி உடைக்கப்பட்டு காங்கிரஸ்-என்சிபி-சிவசேனா கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது) எப்படி அரசியல் மாற்றம் நிகழ்ந்ததோ அதேபோல கர்நாடகாவிலும் நடக்கப் போகிறது. இந்த அரசியல் தலைகீழ் மாற்றமும் ஆட்சி கவிழ்வதும் கர்நாடகவில் எந்த நேரத்திலும் நடக்கலாம். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் தத்துவம், சித்தாந்தம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தற்போதைய சூழ்நிலைகள் அரசியல் சூழ்நிலைகளை புரட்டிப் போடப் போகின்றன. இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

கர்நாடகா காங்கிரஸ் அரசில் துணை முதல்வராக இருக்கும் டி.கே.சிவகுமாரை குறிவைத்துதான் இத்தகைய கருத்துகளை குமாரசாமி தெரிவித்து வருகிறார். டிகே சிவகுமார், தம் மீதான வழக்குகளில் இருந்து தப்பிக்கவே பாஜக பக்கம், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுடன் தாவுவார் என்கிறார் குமாரசாமி.

  • நகைச்சுவை நடிகர் மரணம்.. வீட்டுக்கே சென்று ₹1 லட்சம் கொடுத்த விஜய்.. அறிந்திராத உண்மை!
  • Views: - 433

    0

    0