காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு கத்திக்குத்து… அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
21 August 2023, 8:18 am

காங்கிரஸ் பெண் எம்எல்ஏவுக்கு கத்திக்குத்து… அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அதிர்ச்சி சம்பவம்!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கொன் மாவட்டம் குஜி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஷகினி சந்து சாஹூ. இவர் நேற்று மாநிலை தன் தொகுதிக்கு உள்பட்ட ஜோத்ரா கிராமத்தில் நடைபெறவிருந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஷகினி நிகழ்ச்சி மேடையில் அமர்ந்திருந்தார். அப்போது, நிகழ்ச்சி மேடையில் அமர்ந்த நபர் தான் வைத்திருந்த கத்தியால் திடீரென ஷகினி மீது தாக்குதல் நடத்தினார். இந்த கத்தி தாக்குதலில் ஷகினியின் கையில் படுகாயம் ஏற்பட்டது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக ஷகினியை மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று முதலுதவி அளித்தனர்.

பின்னர், ஷகினி மீது தாக்குதல் நடத்திய காளீஸ்வர் என்ற நபரை கைது செய்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய நபர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

மேலும், தாக்குதலுக்கான காரணம் குறித்து தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • manimegalai shared about quit the anchoring job பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை