சர்ச்சைக்குரிய சீன உளவு கப்பல் பக்கா ஸ்கெட்சுடன் இலங்கைக்கு வந்தது : அடுத்த நடவடிக்கை என்ன? மாஸ்டர் பிளான் போட்ட இந்தியா!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2022, 1:29 pm

இந்தியா மற்றும் சீனா இடையே சர்ச்சையை ஏற்படுத்திய சீன ஆராய்ச்சிக் கப்பல் யுவான் வாங்-5 இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தின் அனுமதியின் பேரில் இந்தக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தக் கப்பலின் வருகை குறித்து இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததுடன், சர்ச்சைக்குரிய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சீனக் கப்பலின் வருகையை எதிர்வரும் 10ஆம் தேதி ஒத்திவைக்குமாறு சீன அதிகாரிகளிடம் வெளிவிவகார அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்தது.

இருப்பினும், இந்த கப்பல் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு வெளிவிவகார அமைச்சகம் அதிகாரபூர்வ அனுமதி வழங்கியுள்ளதுடன், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் 22ஆம் தேதி வரை கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட உள்ளது.

  • Attakathi Dinesh latest news கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!