சர்ச்சையில் சிக்கிய காளஹஸ்தி கோவில் : தேசியக்கொடியை போர்த்தி கோபுரம் அலங்கரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan13 August 2022, 2:14 pm
ராகு,கேது தோஷ பரிகாரங்களுக்கு புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் காளஹஸ்தி கோவில் உள்ள கோபுரம் ஒன்றிற்கு மூவர்ண கொடி போர்த்தப்பட்ட நிலையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திர அம்ர்தோற்சவ தினம் என்று கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இந்த நிலையில் நாட்டின் குடிமக்கள் அனைவரும் 13 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளார்.

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று நாட்டில் பல்வேறு பாகங்களிலும் வீடுகள், வணிக வளாகங்கள், பள்ளிகள், கல்லூரிகள்,கோவில்கள் ஆகிய அனைத்திலும் இன்று காலை தேசிய கொடி ஏற்றப்பட்டது
இதன் ஒரு பகுதியாக காளஹஸ்தி கோவில் கோபுரத்தின் மீதும் மூன்று தேசிய கொடிகளை ஏற்றிய கோவில் நிர்வாகம் கோபுரத்தின் மீது மூவர்ண கொடியை போர்த்தி அலங்கரித்துள்ளது.
இந்த நிலையில் மூவர்ண கொடியை இதுபோல் பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் இந்த செயல் ஆகம விதி மீறல் என்ற குற்றச்சாட்டுகளும் ஏற்பட்டுள்ளன.