500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர்.. அடுத்த வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வழங்கப்படும் : முதலமைச்சரின் அதிரடி அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 December 2022, 7:18 pm

அடுத்த ஆண்டு எப்ரல் 1 முதல் ரூ. 500 க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

ராஜஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.500 ஆக குறைக்கப்படும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 500 க்கு சிலிண்டர் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி முன்னிலையில் இந்த அறிவிப்பை அசோக் கெலாட் வெளியிட்டார். மேலும் பஜகவை விமர்சித்த அசோக் கெலாட் கூறியதாவது, அடுத்த மாதம் பட்ஜெட்டிற்கு நான் தயாராகி வருகிறேன்.

தற்போது ஒன்றை மட்டும் என்னால் சொல்ல முடியும். உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஏழை மக்களுக்கு பிரதமர் மோடி சிலிண்டர் வழங்கி வருகிறார். ஆனால், இவை அனைத்து காலியாகவே உள்ளன.
ஏனென்றால் சிலிண்டர் விலை ரூ.400 மற்றும் 1,040 ஆக உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பெறும் ஏழைகளுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை ரூ.500க்கும் நாங்கள் வழங்குவோம்” என்றார்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!