குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan1 October 2023, 11:59 am
குன்னூர் சுற்றுலா பேருந்து விபத்து.. பிரதமர் மோடி இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு!!
தென்காசி மாவட்டத்தின் பொட்டல்புதூர் இருக்கும் கிராமம் ஒன்றிலிருந்து சுற்றுலா பேருந்தில் 54 பேர் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். சுற்றுலா சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது குன்னூர் அருகே இருந்த பள்ளத்தில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டது. பேருந்து 50 அடி பள்ளத்தில் கீழே விழுந்த காரணத்தால் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த கோர விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தது மட்டுமின்றி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்ததோடு நிதிஉதவியையும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பேருந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.
அந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்கப்படும்.காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என தனது இரங்கலையும் மோடி தெரிவித்துள்ளார்.