ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை?…3வது அலையே இன்னும் முடியல..: ஐஐடி கான்பூர் விஞ்ஞானிகள் கணிப்பு..!!

Author: Rajesh
27 February 2022, 6:03 pm

கான்பூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் கணித்து அறிவித்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.

இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது. அதன்பின், டெல்டா பிளஸ், ஒமிக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது. இருப்பினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோன பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ம் தேதி தொடங்கி அக்டோடபர் 24ம் தேதி வரை நீடிக்கும். எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப4வது அலையின் கடுமை அமையும்.

4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த அலையானது ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை உச்சமடையும். அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா அலை பற்றி 3வது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடும்படியாக, 3வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமுடன் அமைந்திருந்தது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?