புதுவையில் 19 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு: 2 பேருக்கு ‘பாசிடிவ்’…சுகாதாரத்துறை தகவல்…!!

Author: Rajesh
13 April 2022, 7:30 pm

புதுச்சேரி மாநிலத்தில் 19 நாட்களுக்கு பிறகு காரைக்காலில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் காரைக்காலில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் இதுவரை 1962 நபர்கள் உயிரிழந்துள்ளனர்,

இதுவரை 1,65,776 நபர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் 1,63,812 நபர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர் என சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் கடந்த 19 நாட்களாக புதுச்சேரி மாநிலத்தில் யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாத நிலையில் தற்போது காரைக்காலில் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  • திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!