கொரோனா 4வது அலை வரப்போகுதா?…நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு: ஐசிஎம்ஆர் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
Author: Rajesh20 April 2022, 9:56 pm
புதுடெல்லி: கொரோனாவால் பாதிப்புக்குள்ளாவோர் எண்ணிக்கை அதிகரித்தாலும் அது நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் உயர் விஞ்ஞானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்து, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வைக் கண்டுள்ளன.
ஆனால், நோய்த்தொற்றின் எழுச்சி எந்த சந்தர்ப்பத்திலும் கொரோனா நான்காவது அலைக்கு வழிவகுக்காது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ சி எம் ஆர்) முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் ஆர் கங்காகேத்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0
0