மீண்டும் வருகிறதா கட்டுப்பாடுகள்…? அதிகரிக்கும் கொரோனா … அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..!!

Author: Babu Lakshmanan
26 April 2022, 10:34 pm

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இப்படியிருக்கையில், முதல் மற்றும் 2வது அலைகளால் சிதைந்து போன இந்தியாவில், ஆயிரக்கணக்கானோர் செத்தும் மடிந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்றின் தினசரி எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது. அதனால் கொரொனா கால ஊரடங்கு, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் முழுவதுமாய் நீக்கப்பட்டன.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினசரி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,541 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது மீண்டும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தமிழகம், கர்நாடகா, உத்தர பிரதேசம் மற்றும் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் மீண்டும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கி அம்மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. அதேவேளையில், சமூக இடைவேளை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் மீண்டும் கடைபிடிக்கப்படுகின்றன.

நேற்றைய நிலவரப்படி, வைரஸ் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16 ஆயிரத்து 522 ஆக உயர்ந்து உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை மதியம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிவார்.

இதில், மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷன், கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலை குறித்து விளக்கம் அளிப்பார் எனக் கூறப்படுகிறது.

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 1214

    0

    0