இத்தாலி பிரதமருக்கு கொரோனா ‘பாசிடிவ்’: விரைவில் குணமடைய பிரதமர் மோடி ட்வீட்..!!

Author: Rajesh
20 April 2022, 8:47 pm

புதுடெல்லி: எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த தொற்றை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த தொற்று பாதிப்பால் முக்கிய தலைவர்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இத்தாலிய பிரதமர் மரியோ ட்ரெகிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், எனது அன்பு நண்பர் இத்தாலியின் பிரதமர் மரியோ ட்ராகி கோவிட்-19 நோயிலிருந்து விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். என பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி