கலர் கலராக ரூபாய் நோட்டு… உத்து பாத்தா கள்ளநோட்டு : வாரச் சந்தைகளில் புழக்கத்தில் வந்த கள்ளநோட்டுகள்.. விசாரணையில் பகீர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 5:34 pm

ஆகலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் மதன பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிலர் கலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி சென்றது தெரியவந்தது.

இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து மதனப்பள்ளி டி.எஸ்.பி. ரவி மனோகர் ஆச்சாரி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மதன பள்ளி கடைவீதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சித்தூரை சேர்ந்த சோம சேகர், வெங்கடேஷ் மற்றும் பங்காரு பாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட 200 ரூபாய்,500 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சித்தூர் மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு சென்று இதுபோல் கள்ள நோட்டுகளை அவர்கள் தொடர்ந்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!