சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா 4 ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனை காலத்தில் சசிகலா, இளவரசி ஆகியோர் சிறையில் சிறப்பு சலுகை பெறுவதற்காக, அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு, ‘சசிகலா சிறப்பு சலுகைகளை அனுபவித்தது உண்மை’ என 245 பக்க அளவில் அறிக்கை அளித்தது.
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சிறை தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, ஆய்வாளர் பி.சுரேஷா, துணை ஆய்வாளர் கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு பெங்களூரு மாநகர 24-வது அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயண பட் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிருஷ்ணகுமார், அனிதா, பி.சுரேஷா, கஜராஜா, சசிகலா, இளவரசி ஆகிய 6 பேரும் மார்ச் 11-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.