சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது குறித்து விமர்சனம்.. நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
8 March 2024, 8:58 am

சட்டப்பிரிவு 370 ரத்து செய்தது குறித்து விமர்சனம்.. நாட்டு மக்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

மத்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது. இந்த முடிவை மகாராஷ்டிரா மாநிலத்தில வேலைப்பார்த்து வந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் ஜாவித் அகமது விமர்சித்திருந்தார்.

அவர் இது தொடர்பாக தனது வாட்ஸ்அப் பக்கத்தில் “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதி ஜம்மு-காஷ்மீரின் கருப்பு தினம், ஆகஸ்டு 14 பாகிஸ்தான் சுதந்திர தின வாழ்த்துகள்” எனப் பதிவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மும்பை உயர்நீதிமன்றம் அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அப்போது உச்சநீதிமன்றம் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது மற்றும் மாநிலங்கள் எடுக்கும் முடிவை விமர்சனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு.

அதேபோல் மற்ற நாடுகள் அதனுடைய சுதந்திர தினத்தை கொண்டாடும்போது, அந்த நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்துகள் கூறம் உரிமையும் உண்டு எனத் தெரிவித்து ஜாவித் அகமதுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ