தொடர் விடுமுறையால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் : திருப்பதி வேதஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 August 2022, 11:33 am

திருப்பதியில் கூட்டம் பக்தர்கள் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகிறார்கள். அதேபோன்று வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தி வருகிறார்கள்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் காம்ப்ளக்ஸ் இருக்கும் 64 அறையிலும் நிரம்பி இலவச தரிசனத்திற்கு 3 கிலோ மீட்டர் வரை பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதில் இலவச தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் 48 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் கூட்டம் பக்தர்கள் அதிகரித்ததால் விஐபி தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது .21ஆம் தேதி வரை விஐபி தரிசனம் ரத்து என தேவஸ்தானம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…