அலைமோதும் கூட்டம்… 3வது நாளாக திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் : தரிசனத்திற்காக 40 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2022, 11:57 am

கடந்த சனிக்கிழமை துவங்கி இன்று வரை தொடர் விடுமுறை நாட்கள் ஆகையால் ஏழுமலையானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்துள்ளனர். இதனால் மூன்று நாட்களாக திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இன்றும் அதே நிலை தொடரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், டீ ,காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சுமார் 40 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை உள்ளது.

நேற்று ஒரே நாளில் 92,328 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்கள் ஏழுமலையானுக்கு 4 கோடி 36 ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நேற்று ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டு கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 52,969 ஆகும்.

பக்தர்கள் விரைவாக ஏழுமலையான வழிபட வசதியாக இம்மாதம் 21ஆம் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் அடிப்படையிலான விஐபி தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 628

    0

    0