கங்கனாவின் கன்னத்தில் பளார் விட்ட CSIF பெண் அதிகாரி.. விமான நிலையத்தில் அதிர்ச்சி.. வீடியோ வெளியிட்டு ஆதங்கம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2024, 7:32 pm
Kan
Quick Share

இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கங்கனா ரனாவத் 5,37,022 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விக்ரமாதித்யா சிங் 4,62,267 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்நிலையில், சண்டிகர் விமான நிலைய பெண் கான்ஸ்டபிள் நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்ததாக எழுந்த புகாரால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடிய விவசாயிகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என ஏற்கனவே கங்கனா ரனாவத் விமர்சித்திருந்தார். இதற்காக, கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் அறைந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 148

0

0