இந்தூரில் சைவ உணவு சாப்பிடும் நபருக்கு அசைவ உணவு வழங்கியதற்காக உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் நபர் ஒருவருக்கு அசைவ உணவு வழங்கியதற்காக அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகாஷ் துபே என்ற நபர் அந்த உணவகத்தில் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலும்புகள் இருப்பதை கண்டறிந்தார்.
இதையடுத்து அவர் உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து ஆகாஷ் விஜய் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இதுகுறித்து உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராதி மீது 298-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் கமிஷனர் சம்பத் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.
சுமாரான நடிகர் நடிகர் சூர்யா தற்போது டாப் நடிகராக வலம் வந்தாலும் அவர் நடிக்க வந்த புதிதில் அவரது நடிப்பை…
கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் சிவராமன் விநாயகா எண்டர்பிரைசஸ் மற்றும் விஜயா பார்மா என்ற பெயரில் இரண்டு நிறுவனங்கள் நடத்தி வருகிறார்.…
கங்குவா தோல்வி சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த “கங்குவா” திரைப்படம் கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம்…
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜாமீனில் வெளியே வந்த செந்தில் பாலாஜி உடனே அமைச்சராக பதவியேற்றார். மின்துறை மற்றும் மதுவிலக்கு…
படுதோல்வி மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுதோல்வியடைந்தது.…
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் லியோ. திரிஷா, மிஷ்கின் சஞ்சய் தத், அர்ஜூன் உட்பட பலர்…
This website uses cookies.