காலில் விழுந்தும் காதலிக்க மறுத்த இளம்பெண்..கழுத்தை அறுத்த இளைஞர் : ஒரு தலைக் காதலால் விபரீதம்!!
Author: Udayachandran RadhaKrishnan21 March 2022, 4:03 pm
ஆந்திரா : நெல்லூர் அருகே காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடகிரியை சேர்ந்த 18 வயது இளம்பெண் ஜோதிகா. தனியார் கல்லூரி ஒன்றில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார் ஜோதிகா.
அதே பகுதியை சேர்ந்த செஞ்சு கிருஷ்ணா ஒரு தலையாக ஜோதிகாவை காதலித்து வந்தார். செஞ்சு கிருஷ்ணாவின் காதலை ஜோதிகா ஏற்க மறுத்தார். இதனால் ஆவேசம் அடைந்த செஞ்சு கிருஷ்ணா இன்று காலை கல்லூரிக்கு சென்றுகொண்டிருந்த ஜோதிகாவை வழிமறித்து கத்தியால் குத்தியும் அவருடைய கழுத்தை அறுத்தும் கொலை செய்ய முயன்றார்.
ஜோதிகாவின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை மீட்டு வெங்கடகிரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆபத்தான நிலையில் இருக்கும் ஜோதிகாவுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக அவரை திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்துள்ள வெங்கடகிரி போலீசார் ஜோதிகாவை கத்தியால் குத்தி தலைமறைவாகி இருக்கும் செஞ்சு கிருஷ்ணாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.