டானா புயல் கரையைக் கடந்த நிலையில், 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தா: கடந்த வாரம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதன் பிறகு, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது. இந்தப் புயலுக்கு கத்தார் நாடு பரிந்துரைத்த படி, ‛டானா’ எனப் பெயரிடப்பட்டது. இந்த டானா புயல் தீவிர புயலாக நேற்று மாறியது. அதேநேரம், இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். முக்கியமாக, சுமார் 5.80 லட்சம் மக்கள் அரசுத் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.
இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12.20 மணிக்கு டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது. அப்போது, மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயலின் காரணமாக, ஒடிசாவில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. முக்கியமாக, ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் ஆகிய மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.
மேலும், அம்மாநிலத்தின் பத்ரக் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இதனை சீரமைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் அரசு ஊழியர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், “டானா புயல் மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் வடக்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒடிசாவில் தாம்ராக்கு வடக்கு – வடமேற்கு திசையில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், ஹெபலிகட்டி இயற்கை முகாமிற்கு (பிதர்கானிகா) வடக்கு – வடமேற்கு திசையில் 40 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
தற்போது புயல் கரையைக் கடக்கும் நிகழ்வு நடந்து வருகிறது. இவ்வாறு கரையைக் கடக்கும் நிகழ்வு என்பது, இன்னும் 1 – 2 மணி நேரம் வரை நடக்கும். இதன் பின்னர், புயல் ஒடிசாவில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கும்” என இந்திய வானிலை ஆய்வு மையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க : இவ்வளவு நாள் எங்கப்பா இருந்தீங்க.. எஸ்ஏசி – ஆனந்த்.. விறுவிறுப்படையும் தவெக மாநாடு!
இந்த நிலையில், டானா புயலால் கனமழை பெய்யும் இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அங்குள்ள கர்ப்பிணிகளை இடம் மாற்ற அரசு முடிவு செய்தது. இதன்படி, நேற்று வரை 4 ஆயிரத்து 421 கர்ப்பிணிகள் பல்வேறு மருத்துவமனைகள் மற்றும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று மாலை நிலவரப்படி ஆயிரத்து 600 பிரசவங்கள் பார்க்கப்பட்டுள்ளதாக அம்மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.