‘சிட்ரங்’ புயல் எப்போது கரையை கடக்கும்.! மே.வங்காளம், வடகிழக்கு பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை..!

Author: Vignesh
24 October 2022, 3:54 pm

டெல்லி: வானிலை ஆய்வு மையம் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. வடமேற்கு திசையில் நேற்று அதிகாலையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுவடைந்து இருக்கிறது.

தாய்லாந்து நாடு இந்த புயலுக்கு ‘சிட்ரங்’ என்று பெயர் சூட்டி உள்ளது. சிட்ரங் புயல் வலுவடைந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் வானிலை ஆய்வு மையம் மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

சாகர் தீவில் இருந்து 380 கி.மீட்டர் தொலைவிலும் வங்காளதேசத்தின் பாரிசாலுக்கு 670 கிமீ தெற்கே தென்மேற்கிலும் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி புயல் நிலை கொண்டு இருந்தது.

அடுத்த 12 மணி நேரத்தில் இந்த புயல் மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடக்கு-வடகிழக்கு திசையில் ‘சிட்ரங்’ புயல் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) அதிகாலை வங்காளதேச கடற்கரைப் பகுதிகளில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…