ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து : காலிஸ்தான் பயங்கரவாதி பகிரங்க எச்சரிக்கை!!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2023, 5:23 pm
ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தால் உயிருக்கு ஆபத்து : காலிஸ்தான் பயங்கரவாதி பகிரங்க எச்சரிக்கை!!
ஏர் இந்தியா விமானத்திற்குப் மிரட்டல் விடுக்கும் வகையில், காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் பேசிய புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அதில், அவர் நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா வழியாக பயணிக்கும் சீக்கியர்கள் “உயிருக்கு ஆபத்து நேரிட வாய்ப்பு உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்று சீக்கிய மக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். உலகளாவிய முற்றுகை இருக்கும்.
இதனால், நவம்பர் 19 ஆம் தேதி ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய வேண்டாம் அல்லது உங்கள் உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.
மேலும், டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நவம்பர் 19 அன்று மூடப்பட்டிருக்கும் என்றும் அதன் பெயர் மாற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறும் அதே நாளில் தான் இது அனைத்தும் நடக்கும் என காலிஸ்தான் பயங்கரவாதி பரபரப்பாக பேசிய வீடியோ இணையத்தில் வெளிவந்து தற்போது வைரலாக பரவி வருகிறது.