2 நாள் தங்கினால் மட்டுமே திருப்பதியில் தரிசனம் : புரட்டாசி சனிக்கிழமையால் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2022, 12:33 pm

திருப்பதி மலையில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் இலவச தரிசனத்திற்கு 52 மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை, நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய காரணங்களால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது.

இதனால் இலவச தரிசனத்திற்காக சுமார் 8 கிலோமீட்டர் தொலைவு வரை வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். எனவே இலவச தரிசனத்திற்காக 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை தற்போது நிலவுகிறது.

மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்த காரணத்தால் திருப்பதி மலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு அறைகள் கிடைக்காத பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் ஆகையால் பக்தர்கள் கூட்டம் மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

எனவே இயன்றவரை இலவச தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு சாமி தரிசன வாய்ப்பை விரைவாக ஏற்படுத்திக் கொடுக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தான நிர்வாகம் செய்து வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலை பொறுத்த வரை அதிகபட்சமாக வினாடிக்கு ஒன்றரை நபர் என்ற கணக்கில் ஒரு மணி நேரத்தில் 4 ஆயிரத்து 800 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட வசதிகள் உள்ளன.

எனவே பக்தர்களுக்கு 15 மணி நேரம் சாமி கும்பிட வாய்ப்பளித்தால் கூட 75 ஆயிரம் பத்திரம் மட்டுமே கோவிலுக்குள் சென்று இறைவனை தரிசிக்க முடியும்.

ஜரகண்டி தொல்லையை அதிகப்படுத்தினால் மேலும் சுமார் ஐந்தாயிரம் மக்கள் வரை சாமி கும்பிட வாய்ப்புகள் உள்ளன. ஆனால் வந்திருக்கும் பக்தர்கள் எண்ணிக்கை ஒன்றை லட்சத்துக்கு அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 519

    0

    0