மாலத்தீவில் உலக அழகியுடன் டேட்டிங் : நடிகை சுஷ்மிதா சென்னுக்கு, லலித் மோடி’லவ் ப்ரப்போஸ்’ .. திருமண தேதி எப்போ தெரியுமா?!
Author: Udayachandran RadhaKrishnan15 July 2022, 4:53 pm
இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முக்கிய விளையாட்டாக இன்று சக்கை போடு போட்டு வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை உருவாக்குவதில் முன்னோடியாக திகழ்ந்தவர் பிரபல தொழிலதிபர் லலித் மோடி.
நிதி மோசடியில் சிக்கிய லலித் மோடி தற்போது லண்டனில் வசித்து வருகிறார். எனினும் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் லலித் மோடி, நேற்று வெளியிட்ட ஒரு பதிவுதான் இணைய உலகத்தை கிரங்கடித்துள்ளது.
இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் முன்னாள் உலக அழகியும், பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென்-ஐ காதலிப்பதாக லலித் மோடி போட்ட பதிவுதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் ஹாட் டாப்பிக்குகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இது தொடர்பான செய்திகள் நேற்று இரவில் இருந்து சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படமும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த டுவிட்டர் செய்தியால் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டனரா? என நெட்டிசன்கள் தொடர்ந்து ஏவுகனை கேள்விகள் எழுப்பியதால் அதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக அடுத்த டுவிட் ஒன்றை லலித் மோடி போட்டு விட்டார்.
அந்த பதிவில், ‘நாங்கள் இருவரும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. டேட்டிங் தான் செய்து வருகிறோம். விரைவில் அதுவும் ஒருநாள் நடக்கலாம்’ என லலித் மோடி கூறியுள்ளார்.
கடந்த 2018ல் லலித் மோடி தனது மனைவியை விவாகரத்து செய்திருந்தார். இதே போல சுஷ்மிதா சென் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது பாய் பிரண்ட் ரோஹ்மனை பிரிவதாக அறிவித்திருந்தார். அதற்குள் புதிய உறவை சுஷ்மிதா தேடிக்கொண்டுள்ளார். தற்போது லலித் மோடியின் ட்விட்டை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.