முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு கொலை மிரட்டல் : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 November 2023, 3:25 pm

முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு கொலை மிரட்டல் : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!!

புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து அண்மையில் ராஜினாமா செய்துள்ள சந்திர பிரியங்கா, கணவர் தன்னை மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த குற்றச்சாட்டு கடும் விவாதத்தை கிளப்பிய நிலையில் இவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. அதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்ததாக அப்போது தகவல் பரவியது.

இந்த நிலையில் சந்திர பிரியங்கா கணவர் தன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி டிஜிபியை நேற்று சந்தித்து அவர் கொடுத்துள்ள புகாரில் ’கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன் மீது அவர் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

  • vasanthabalan apologize for the character portrayed in his veyil movie வெயில் படத்துல அப்படி பண்ணிருக்கக்கூடாது- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட வசந்தபாலன்…