இந்துத்வா கொள்கை கொண்ட சுதந்திர போராட்ட வீரர் வீர சாவர்க்கர் சிறையில் இருந்தபோது பயத்தின் காரணமாக ஆங்கிலேயர் அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியதாகவும், ஆங்கிலேயர் அரசுக்கு உதவியதாகவும் மராட்டியத்தில் நடைபெற்று வரும் நடைபயணத்தில் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார்.
இதற்கு பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன.
வீர சாவர்க்கர் நாசிக்கில் உள்ள பகுர் என்ற ஊரை சேர்ந்தவர் என்ற நிலையில், அங்கு நேற்று முழு அடைப்புக்கு பா.ஜனதா அழைப்பு விடுத்தது.
இதற்கு ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் சத்ரபதி சிவாஜி சவுக்கில் கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இந்தூர் நகரில் நவம்பர் 28 அன்று ராகுல் காந்தி பாத யாத்திரை மேற்கொண்டால் அங்கு குண்டுவெடிப்பு நிகழும் என்று மிரட்டல் கடிதம் கொடுத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அந்த கடிதத்தில் ராகுல் காந்தி மற்றும் மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத் ஆகியோர் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மேலும், 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.