நாட்டை உலுக்கிய டெல்லி வணிக வளாக தீ விபத்து…பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு: 40 பேருக்கு பலத்த தீக்காயம்…தலைவர்கள் இரங்கல்..!!

Author: Rajesh
14 May 2022, 10:40 am

டெல்லி : டெல்லி வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் இருக்கும் முன்ட்கா மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இருக்கும் வணிக வளாகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்த தகவல் அறிந்த 20 தீயணைப்பு துறையினர் இடத்திற்கு வந்து தீயை அணைக்க போராடி உள்ளனர்.

4 மாடி கட்டிடத்தில் முதலில் முதல் தளத்தில் மட்டும் தீ ஏற்பட்டுள்ளது. அதன்பின் வேகமாக தீ பரவி 2, 3 மற்றும் 4வது மாடியிலும் தீ பரவி உள்ளது. முதல் தளத்தில் சிசிடிவி உற்பத்தி மற்றும் மற்றும் வைபை உற்பத்தி மையம் அமைந்துள்ளது. இங்குதான் முதலில் தீ ஏற்பட்டு உள்ளது. முதலில் மெதுவாக பரவிய தீ நேரம் செல்ல செல்ல வேகமாக பரவியது. தீ பரவியது முதலில் 2 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்க முயன்று முடியாமல் போனது.

இதனால் மேலும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. இதனால் மொத்தம் 5 தீயணைப்பு வாகனங்கள் இணைந்து போராடி இரவு நேரத்தில் தீயை அணைத்தனர். இதையடுத்து சேதம் அடைந்த கட்டிடத்தில் இருந்து மக்கள் மீட்கப்பட்டனர். 27 பேர் பலி 27 பேரின் உடல் இதுவரை முதல் இரண்டு தளங்களில் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 68 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதில் தீவிர தீக்காயங்களுடன் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை. மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்னும் உடல்கள் வரலாம் இதில் மூன்றாவது மாடியில் இருந்து மேலும் சில உடல்கள் மீட்கப்படலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

முதல் தளத்தில் கடைகள் வைத்து இருந்த இரண்டு நிறுவனங்களின் ஓனர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கடுமையாக காயம் அடைந்த நபர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது. இரங்கல் பிரதமர் மோடி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். மத்திய அரசு சார்பாக இறந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 984

    0

    0