தேர்தல் பத்திரங்கள் பற்றிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பார் கவுன்சில்!

Author: Udayachandran RadhaKrishnan
12 March 2024, 7:59 pm

தேர்தல் பத்திரங்கள் பற்றிய தீர்ப்பை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பார் கவுன்சில்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுமதிக்க கூடாது எனவும், வழக்கு மறுபரிசீலனை செய்யப்படும் வரை தீர்ப்பை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தக் கோரி கடிதம் மூலம் ஆதிஷ் அகர்வாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில், இந்திய நாடாளுமன்றம், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பொது மக்களுக்கு முழுமையான நீதியை உறுதி செய்ய தேர்தல் பத்திரங்கள் வழக்கை மீண்டும் முதலில் இருந்து விசாரிக்க வேண்டும்.

அரசியலமைப்பு சட்டத்திற்கு முட்டுக்கட்டையை உருவாக்கும் வகையிலும், நாடாளுமன்றத்தின் மகத்துவத்தை குலைக்கும் வகையிலும் உச்சநீதிமன்றம் தீர்ப்புகளை வழங்கக் கூடாது.

தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பின்னணியில் உள்ள அரசின் நோக்கத்தை சந்தேகிப்பது மிக மோசமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!