திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டத்தால் தரிசனம் செய்வதில் தாமதம்… விஐபி தரிசனம் திடீர் ரத்து : லட்டுக்கு கட்டுபாடு விதித்தது தேவஸ்தானம்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 June 2022, 3:27 pm

திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக 20 மணி நேரம் காத்திருக்க வேண்டும் சூழல் ஏற்பட்டுள்ளதால் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேன்று மாலை முதல் அதிக அளவில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இலவச தரிசனத்திற்காக 20 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகளில் 64 அறைகளும் நிரம்பிய நிலையில் 4 கிலோ மீட்டர் வரை வரிசையில் பக்தர்கள் காத்துள்ளனர்.

இதனால் தற்போது வரும் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனத்திற்காக 20மணி நேரத்திற்கு மேல் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், 300 ரூபாய் சிறப்பு தரிசன தற்காக 3 மணியில் இருந்து 4 மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒருவருக்கு 3 லட்டுகள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. திருமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால் வெள்ளி, சனி , ஞாயிறு கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்வதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!