3 உயிர்களை காவு வாங்கிய விமான நிலையம்!

Author:
28 June 2024, 12:04 pm

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் (Indira Gandhi International Airport) டி-1 டெர்மினல் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மேற்கூரையில் இருந்த ராட்சத கம்பி இடிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார்களின் மீது விழுந்தது. இதனால், அங்கிருந்த கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது.இது தொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் தற்போது பலியாகி உள்ளனர்.இந்த ம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். இந்த விமான நிலையத்தை கடந்த மார்ச் மாதத்தில் தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • a scene leaked in internet from thug life movie என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?