“கனமழையால் நேர்ந்த விபரீதம்”-டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு!

Author:
28 June 2024, 9:58 am

டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் (Indira Gandhi International Airport) டி-1 டெர்மினல் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மேற்கூரையில் இருந்த ராட்சத கம்பி இடிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார்களின் மீது விழுந்தது. இதனால், அங்கிருந்த கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது.இது தொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.தற்போது மேற்கூரை சரி செய்யும் பணி தொடங்கி இருக்கிறது.

  • Shocking incident shared by shalini pandey உடை மாற்றும் அறையில் திடீரென நுழைந்த இயக்குனர்! அதிர்ந்துப்போன ஷாலினி பாண்டே…