அத்துமீறிய காவல் உதவி ஆணையர்… நீதிபதியிடம் கொடுத்த வீடியோ ஆதாரம் ; கைதான டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்…!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 2:24 pm

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் பரபரப்பு புகாரை அளித்துள்ளார்.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியது.

இந்த நிலையில், கைது செய்வதில் விலக்கு அளிக்கக்கோரிய கெஜ்ரிவாலின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்த நிலையில், அவர் அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து அவர் நேற்று விசாரணைக்காக நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட போது, காவல் உதவி ஆணையர் ஏ.கே.சிங் என்பவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கெஜ்ரிவால் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கெஜ்ரிவால் புகார் அளித்த காவல் ஆணையர், ஏற்கனவே,டெல்லியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சுட்டிக்காட்டி டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அந்த அதிகாரியை தனது பாதுகாப்பு வளையத்திலிருந்து நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கு டெல்லி போலீசார், “நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. வீடியோவில் காட்டப்பட்டுள்ள செயல் பாதுகாப்புக்கு அவசியப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊடகங்களுக்கு அறிக்கை கொடுப்பது சட்டத்திற்கு எதிரானது, என்று விளக்கம் அளித்திருந்தனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 330

    0

    0