ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் படங்கள்… கெஜ்ரிவால் கொடுத்த திடீர் யோசனை.. எதற்காக தெரியுமா..?

Author: Babu Lakshmanan
26 October 2022, 3:33 pm

புதிய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுளின் படங்களையும் அச்சடிக்க வேண்டும் என்று டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- இனி புதிதாக அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படங்களுக்கு அருகே லட்சுமி, விநாயகர் உள்ளிட்ட கடவுள்களின் புகைப்படங்களையும் அச்சிட வேண்டும். அப்படி செய்தால் நாடு செழிப்படையும். ரூபாய் மதிப்பு சரிவதை கடவுள் படங்கள் தடுக்கும். இதனால், நாட்டின் பொருளாதார சூழ்நிலை மேம்படும்.

arvind kejriwal - updatenews360

இதுபற்றி இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன். என்னதான் முயற்சிகள் செய்தாலும், கடவுளின் ஆசி இல்லையென்றால், நம்முடைய அந்த முயற்சிக்கு பலன் இருக்காது.அதனால், புதிதாக வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தி உருவமும், மற்றொரு புறம் பெண் கடவுள் லட்சுமி மற்றும் கடவுள் விநாயகர் படங்கள் இடம்பெற வேண்டும்.

lakshmi god - updatenews360

ரூபாய் நோட்டுகளில் லட்சுமி, விநாயகர் உருவங்களை அச்சடித்தால், நாட்டின் பொருளாதாரத்தை சீரமைக்க பெரிதும் உதவும், என்று கூறினார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 455

    0

    0