ஊழல் செய்தது அம்பலம்…? பதவியை ராஜினாமா செய்த துணை முதலமைச்சர் ; மற்றொரு அமைச்சரும் பதவி விலகல்.. ஆட்டம் காணும் ஆளும் கட்சி!!

Author: Babu Lakshmanan
28 February 2023, 6:22 pm

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதான டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. ஆம் ஆத்மி மூத்த தலைவரான மணிஷ் சிசோடியா துணை முதலமைச்சராக உள்ளார். இவர், கலால் துறையையும் கவனித்து வருகிறார். தனியார் நிறுவனங்களுக்கும் உரிமம் வழங்கும் வகையில் மதுபான விற்பனை கொள்கையில், கடந்தாண்டு மாற்றம் செய்யப்பட்டது.

AAP_Manish_Sisodia_Kejriwal_UpdateNews360

இதில், சில தனியார் நிறுவனங்களுக்கு சலுகை காட்டப்பட்டதாகவும், இதனால் டெல்லி மாநில அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு டெல்லி துணை நிலை கவர்னர் உத்தரவிட்டார்.

அதன்படி, சிசோடியாவின் வீடு உட்பட 21 இடங்களில் சிபிஐ அதிகாரிகளும், மதுபான நிறுவனங்கள் குறித்த இடங்கள் என பல்வேறு மாநிலங்களிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சோதனை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், துணை முதலமைச்சர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டுள்ளார். அதேவேளையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அடுத்தடுத்து இரு அமைச்சர்கள் பதவி ராஜினாமா செய்திருப்பது டெல்லி அரசியலில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 507

    0

    0