டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை : சிறையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் அமலாகத்துறை ரெய்டு!!
Author: Udayachandran RadhaKrishnan6 June 2022, 8:57 am
டெல்லியில் பணமோசடி வழக்கில் கடந்த மே 30 ஆம் தேதி அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார்.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அவர் மே 31 முதல் ஜூன் 9 வரை காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,தற்போது அவரது வீட்டில் அமலாக்கதுறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் சட்ட விரோதமாக ஹவாலா பரிவர்த்தனை மேற்கொண்டது தொடர்பாக, டெல்லியில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் வீட்டிலும், டெல்லியில் அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகின்றனர்.