மதுபானக் கொள்கை முறைகேட்டில் கெஜ்ரிவாலுக்கு முக்கிய பங்கு… CM என்பதால் சலுகை அளிக்க முடியாது ; டெல்லி உயர்நீதிமன்றம்
Author: Babu Lakshmanan9 April 2024, 4:37 pm
டெல்லி மதுபானக் கொள்கையில் அரவிந்த் கெஜ்ரிவால் சதியில் ஈடுபட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளதாக டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21-ந் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது, அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் முதலமைச்சர் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க: தேர்தல் பத்திரம் மூலம் விவசாயியிடம் மோசடி..? பாஜகவுக்கு கைமாறிய ரூ.10 கோடி… போலீஸில் புகார்..!!!
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, டெல்லி மதுபான கொள்கை உருவாக்கத்தில் மனுதாரர் அரவிந்த் கெஜ்ரிவால் முக்கிய பங்காற்றியுள்ளார். கெஜ்ரிவால் பங்கு இருப்பது அமலாக்கத்துறை ஆதாரங்களில் இருந்து தெரிய வருகிறது. அப்ரூவரின் வாக்கு மூலத்தை சந்தேகிப்பது நீதிபதி, நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதாகிவிடும்.
யார் யாருக்கு தேர்தல் பத்திரத்தை வழங்கியுள்ளனர் என்பது குறித்து ஆராய வேண்டிய அவசியம் இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. காணொலியில் விசாரித்திருக்கலாம் என்ற வாதம் நிராகரிக்கப்படுகிறது. எப்படி விசாரிப்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் முடிவு செய்ய முடியாது.
மேலும் படிக்க: சமோசாவில் இருந்த நிரோத், குட்கா, கற்கள் : ஊழியர்கள் ஷாக்… அதிர்ச்சி பின்னணி!!
முதல்வர் என்பதால் தனிச்சலுகை அளிக்க முடியாது. மக்களவை தேர்தல் குறித்து கெஜ்ரிவாலுக்கு தெரியும். தேர்தலை முன்னிட்டு அமலாக்கத்துறை கைது செய்துள்ளதாக கொள்ள முடியாது. நீதிபதிகள் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அரசியலுக்கு அல்ல. அரசியல் காரணங்களை பரிசீலிக்க முடியாது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையிலானது அல்ல, என தெரிவித்துள்ளார்.