மெட்ரோ ரயிலில் ஆணின் அந்தரங்க செயல்… அதிர்ந்து போன பெண் பயணிகள் ; வைரலாகும் ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
28 April 2023, 5:04 pm

மெட்ரோ ரயிலில் பெண்கள் உள்பட ஏராளமானோர் பயணித்துக் கொண்டிருக்கும் போது, நபர் ஒருவர் அந்தரங்க செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லி மெட்ரோ ரயிலில் தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணித்து வருகின்றனர். அந்த வகையில், பயணிகள் வழக்கம் போல பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்படியிருக்கையில் மெட்ரோ ரயில் ஓடிக்கொண்டிருக்கும் போது, பெண்ணின் அருகே அமர்ந்திருந்த நபர் ஒருவர் ஆபாச செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த நபர் தனது செல்போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டு சுய இன்பம் அனுபவித்த நிகழ்வை அந்த ரயிலில் பயணித்த சக பயணிகள் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மெட்ரோ ரெயிலில் ஆபாச செயலில் ஈடுபட்ட அந்த ஆண் பயணியை கைது செய்யவேண்டும் என்று டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி டெல்லி போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல், ஒரு இளம்பெண்ணும், ஆணும் மெட்ரோவில் முத்தம் கொடுப்பது உள்பட பல்வேறு ஆபாசமான செயல்கள் குறித்த வீடியோக்களும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. எனவே, இதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…