ஐபிஎல் போட்டி 2022: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு!!

Author: Rajesh
20 April 2022, 7:34 pm

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

டெல்லி அணியில் பிசியோ உட்பட 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த போட்டி நடைபெறுமா என முதலில் சந்தேகம் எழுந்தது.

இருப்பினும் கடைசியாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவில் மற்ற வீரர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் முடிவு வந்ததால் இந்த போட்டி நடைபெறுவது உறுதியாகியது. இந்த போட்டியில் தற்போது டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1756

    0

    0