பிரதமர் அலுவலகம் செல்ல அனுமதி மறுப்பு.. சாலையில் விருதுகளை போட்டுச் சென்ற வீராங்கனை வினேஷ் போகத்!!!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். பாஜக எம்.பியாகவும் இருக்கும் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாகவும் எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின.
குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார்.
இதன்பின்னர், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர்களை போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்று சாக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா உள்ளிட்டோர் மத்திய அமைச்சரிடம் நேரடியாக முறையிட்டு இருந்தனர்.
எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
இதையடுத்து கடந்த 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியாக அறிவித்தார். மல்யுத்த வீராங்கனை ஷாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் இருந்தே விலகுவதாக கண்ணீருடன் பேட்டியளித்தார். பிரஸ்மீட்டில் கண்ணீருடன் பேசிய அவர், இனி மல்யுத்த போட்டியில் நான் விளையாட போவதில்லை என்று அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதேபோல், மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் தனது பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, இந்திய மல்யுத்த சம்மேளன நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டு மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த இடைநீக்கம் தொடரும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மல்யுத்த சம்மேளனத்தை நடத்த தற்காலிக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சஞ்செய் சிங் தேர்வு ஆனதற்கு எதிர்ப்பு தெரிவித்த மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகத் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை சாலையில் விட்டு சென்றார்.
டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள கடமை பாதையில் மத்திய அரசு தனக்கு வழங்கிய அர்ஜூனா மற்றும் கேல் ரத்னா விருதுகளை விட்டு சென்றார். வினேஷ் போகத் தனக்கு வழங்கப்பட்ட விருதுகளை பிரதமர் அலுவலகத்திற்க்கு வெளியே விட்டு செல்ல முயற்சித்தார்.
எனினும் போலீசார் தடுத்து நிறுத்தியதால் கடமை பாதையிலேயே வைத்து விட்டு சென்றார். முன்னதாக, பிரிஜ் பூஷன் சிங்கிற்கு நெருக்கமானவராக அறியப்படும் சஞ்செய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு வினேஷ் போகத் கடிதமும் எழுதியிருந்தார்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.