திருப்பதி கோவிலுக்கு வந்த பிரபல நடிகைக்கு அனுமதி மறுப்பு? ஆத்திரத்தில் தேவஸ்தான ஊழியரை தாக்கிய வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
5 September 2022, 4:45 pm

சாமி கும்பிட வந்து டிக்கெட் கிடைக்காத காரணத்தால் திருப்பதி மலையில் தேவஸ்தான ஊழியர்களை பிரபல நடிகை தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த பிரபல நடிகை அர்ச்சனா கெளதம். கடந்த வியாழன் அன்று சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்தார்.

தனக்கு தேவையான டிக்கெட்களை வாங்க அவர் திருப்பதி மலையில் உள்ள கூடுதல் நிர்வாக அதிகாரி அலுவலகத்திற்கு சென்று இருக்கிறார். அப்போது டிக்கெட் கொடுப்பது தொடர்பாக அங்கிருந்து ஊழியர்களுக்கும் நடிகைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது நடிகை அர்ச்சனா கெளதம் தேவஸ்தான ஊழியர் ஒருவரை தாக்குவது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது தவிர இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்க மறுக்கின்றனர்.

இதனை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கவனத்தில் கொண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் ஹிந்தியில் பேசுவது தொடர்பான வீடியோ காட்சிகளிலும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பது அந்த அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகள் வெளியானால் மட்டுமே உறுதியாக தெரியவரும்.

தரிசன டிக்கெட் தொடர்பாக நடிகைக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது அதனை தன்னுடைய செல்போனில் நடிகை அர்ச்சனா கெளதம் வீடியோ எடுத்திருக்கிறார். அப்போது நடிகைக்கும் தேவஸ்தான ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

  • Vijay TV celebrity diagnosed with rare disease… Slim body photo goes viral விஜய் டிவி பிரபலத்துக்கு அரிய வகை நோய்… உடல் மெலிந்த போடோ வைரல் : நடிகை கண்ணீர்!