கோயில் திருவிழாவில் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள்… மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 November 2023, 6:18 pm

கோயில் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்ததால் விபரீதம்.. உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே நேரத்தில் முண்டியடித்த பக்தர்கள்!!

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஹாசனாம்பா அம்மன் கோவிலில் இன்று ஆண்டு திருவிழாவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்து கொண்டிருந்த நிலையில் கூட்டத்தை நெறிப்படுத்த அமைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு அரணில் திடீரென மின்சாரம் பாய்ந்தது.

இரும்பு கம்பி மூலமாக மின்சாரம் பாய்ந்த நிலையில் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்கள் ஒரே நேரத்தில் அரன்களை உடைத்து வெளியேற துவங்கினர்.

இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்து நெருசலில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக கோவில் நிர்வாகிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தி கீழே விழுந்தவர்களை ஒவ்வொருவராக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மின்சாரம் தாக்கப்பட்டும் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தும் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் அரசு மறு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரும்பு தடுப்பு கம்பிகளில் மின்சாரம் பாய்ந்த நிலையில் உடனடியாக சம்பவ இடத்திற்கு மின்சார துறை அதிகாரிகள் சென்று அதை சீர் செய்தனர். இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • Amala Paul Share his Truth 17 வயதுல அந்த மாதிரியான படத்தில்.. தலைகாட்ட முடியல.. என் அப்பாதான் : அமலா பால் பகிர்ந்த உண்மை!